தோனியின் ஆட்டோகிராஃபுடன்.. பேட்.. கிஃப்ட்டை பகிர்ந்த யோகிபாபு.!   - Seithipunal
Seithipunal


தனியார் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகர் யோகிபாபு. அதன்பின், தன்னுடைய  நடிப்புத் திறமையாலும், வசனங்களாலும், வெள்ளித் திரையிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவரது நடிப்பில் வெளியாகிய சூது கவ்வும் மற்றும் டிமாண்டி காலனி போன்ற படங்களால் இவர் அதிக ரசிகர்களை சென்றடைந்தார்.

இதனை தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, மெர்சல், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரானார்.  

யோகிபாபுவுக்கு சினிமா மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிக்கின்றார். இவர் சினிமாவில் நடிக்கும் நேரம் தவிர்த்து, கிரிக்கெட் பேட்டுடன் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். யோகிபாபு அடிக்கடி வலைப்பயிற்சியில் ஈடுபடுகின்ற வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகும்.

தற்போது யோகிபாபு கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும், "லெட்ஸ் கெட் மேரிட்" படத்தில் நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில், தோனி தனது கையொப்பமிட்ட ஒரு பேட்டை யோகிபாபுவுக்கு பரிசளித்த நிலையில், அந்த பேட்டை புகைப்படமாக யோகிபாபு இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Babu get gift Autographed bat from Ms dhoni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->