அனிருத்தின் திருமணம் எப்போது? அவரோட அப்பா என்ன சொல்லிருக்காரு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத், ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். ஒரு படத்திற்கு பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில், அவரது திருமணம் குறித்து ரசிகர்களிடையே அடிக்கடி கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த சூழலில் அனிருத்தின் திருமணம் குறித்து அவரது தந்தை ரவி ராகவேந்திரா பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரஜினிகாந்தின் மைத்துனருடைய மகனான அனிருத், சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்டவர். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு அவர் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசைகள் தொடர்ந்து ஹிட்டாகி, குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இன்று ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை பல நடிகர்கள், அனிருத்தின் இசை இருந்தால்தான் படம் செட் ஆகும் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அதே நேரத்தில், அவரது இசை குறித்து விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஒரே மாதிரியான இசை என்று சிலர் குற்றம்சாட்டினாலும், அனிருத் இசையமைக்கும் பாடல்கள் தொடர்ந்து சென்சேஷனாக மாறுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருமண வயதை அடைந்துள்ள அனிருத்தின் திருமணம் குறித்து பல்வேறு கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. தொழிலதிபர் ஒருவரின் மகளை அவர் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா அளித்த பேட்டியில், இன்றைய இளைஞர்கள் திருமணம் குறித்து பெற்றோரிடம் முன்வந்து பேசுவதில்லை என்றும், சிலர் நேரடியாக திருமணம் செய்யப் போவதாக மட்டும் தெரிவிப்பதாகவும் கூறினார். அனிருத் எப்போது திருமணம் பற்றி சொல்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் கூறினார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனிருத் திருமணம் தொடர்பான முடிவை பெற்றோரிடமே விட்டுவிட்டாரோ என்ற விவாதமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When is Anirudh wedding Do you know what his father said


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->