''வெப்பன்'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''வெப்பன்''. ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஆயுதங்களால் அழிக்க முடியாத சூப்பர் ஹியூமன் என்ற கதையாக தயாராகியுள்ளது. 

இந்த திரைப்படம் மே மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளி போனது. இந்நிலையில் தற்போது ''வெப்பம்'' திரைப்படம் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Weapon Movie Release Update


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->