“படையப்பா நீலாம்பரி ஜெயலலிதாவை வைத்து உருவாக்கப்பட்டதா?” – 'ஜெயலலிதாவிற்கு காட்ட வேண்டாம் என பயந்தார்கள்'.. ரஜினிகாந்த பகிர்ந்த தகவல்! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், அந்த படத்தின் நினைவுகளைமும் திரைபின்னணிக் கதைகளையும் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக பகிர்ந்துள்ளார். குறிப்பாக நீலாம்பரி கதாபாத்திரம், ஜெயலலிதா தொடர்பான புரளி, மற்றும் படையப்பா 2 குறித்து அவர் சொன்ன தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1999ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படையப்பா திரைப்படம் இன்றும் ரசிகர்களின் மனதில் குடியிருக்கிறது. ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக வலுவான வில்லத்தியாக பேசப்பட்டு வருகிறது. அந்த கதாபாத்திரம் எப்படி உருவானது என்ற விவரத்தையும் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

நீலாம்பரி பாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டது என ரஜினி கூறியுள்ளார். “பலரிடம் சோதித்து பார்த்தோம். அப்படி சரியாக வரவில்லை. ஐஸ்வர்யா ராய்த்து பேசினோம். ஆனால் ரம்யா கிருஷ்ணன் மேக்கப் போட்டு களமிறங்கியபோது தான் சரியான நீலாம்பரி கிடைத்தது,” என அவர் தெரிவித்துள்ளார்.

திரைப்படம் வெளியான காலத்தில், நீலாம்பரி கதாபாத்திரம் ஜெயலலிதாவை மையமாகக் கொண்டது என்ற வதந்தி பரவியது. அதற்கு ரஜினிகாந்த் தெளிவாக பதில் அளித்துள்ளார்:“1996ல் நான் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியிருந்தேன். படையப்பா எடுத்துக்கொண்டிருந்த போது அவளை வைத்து நீலாம்பரி உருவாக்கினார்கள் என்ற வதந்தி கிளம்பியது. படம் வெளியான பின் ஜெயலலிதா பார்க்க விரும்பினார். சிலர் பயந்தார்கள். ஆனா நான் ரீலை நேரடியாக போயஸ் கார்டனுக்கு அனுப்பச் சொன்னேன். அவர் பார்த்துவிட்டு ‘நல்ல படம்னு’ சொன்னாராம்.”

ரசிகர்கள் பல ஆண்டுகளாக படையப்பா 2 காத்திருக்கிறார்கள். அதற்கும் ரஜினி உற்சாகமான பதில் கூறியுள்ளார்:“இப்ப எல்லாமே 2.0. அதேபோல ஏன் படையப்பா 2 எடுக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. நீலாம்பரி என்ற தலைப்பில் கதையை உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம். எல்லாம் சரியாக அமைந்தால் படையப்பா 2 நிச்சயம் வரும்.”

இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாம்பரி கதாபாத்திரம் மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால், எதிர்பார்ப்பு வானளாவியுள்ளது.

ரஜினியின் தெளிவான விளக்கமும், படையப்பா 2 குறித்த நேரடி உறுதிப்பாடும் தமிழ் சினிமாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Was Padaiyaappa Neelambari made with Jayalalithaa in mind They were afraid not to show it to Jayalalithaa Information shared by Rajinikanth


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->