விக்ரம் பட சம்பள விவரத்தை கேட்டு வியக்கும் கோலிவுட்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், ஷிவானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் 'பத்தல..பத்தல' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகியது.விக்ரம் படத்தின் சென்சார் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து படக்குழு எந்தவிதமான அறிவிப்பு வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில் விக்ரம் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் படம் உருவானதால் அவர் சம்பளம் 50 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 

அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு 10 கோடியும், பஹட் பாசிலுக்கு 4 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் நடித்த மற்ற நடிகர் நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தலா 4 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு 4 கோடி சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் விக்ரம் படம் வசூல் செய்யும் என்றும், கமல்ஹாசன் கேரியரில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் என்றும்  திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 8 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram movie actors salary


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->