காட்டுவாசி கெட்டப்பில் சீயான் விக்ரம்.. 'தங்கலான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு.! - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் மற்றும் அட்டகத்தி போன்ற திரைப்படங்களில் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர், ரஜினியை வைத்து கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

கடைசியாக அவரது இயக்குனர் ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். 

இந்த படம் கே.ஜி.எப் படம் போல இருக்குமென்று ஏற்கனவே பா.ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார். காரணம் இதுவும் கோலார் தங்க சுரங்கத்தில் வசிக்கும் மக்களின் கதை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், விக்ரம் 61 என்று குறிப்பிடப்படும் இந்த படத்திற்கு தங்கலான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் காட்டுவாசி கெட்டப்பில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram in Thangalan movie 1st look video released


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->