பாடகர் விஜய் ஜேசுதாஸ் மனைவி, சென்னை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்! மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


சென்னை அபிராமபுரத்தில் உள்ள பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ் வீட்டில் சுமார் 60 பவுன் நகை மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் பிரபல பாடகரான ஜேசுதாஸின் மகன் தான் விஜய் ஜேசுதாஸ். தந்தையை போலவே பின்னணி பாடகரான இவர், சென்னை அபிராமபுரத்தில்  குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தன் வீட்டில் 60 பவுன் நகை திடீரென காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். 

இது தொடர்பாக பாடகரின் மனைவி தர்க்ஷனா பாலா அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் அந்த புகாரில், கடந்த டிசம்பர் மாதமே நகை காணாமல் போயிருக்க வாய்ப்புள்ளதாகவும், இப்பொழுது தான் எதேச்சையாக தெரிய வந்ததாகவும், வீட்டில் வேலை செய்த பணியாளர்களின் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விரைவில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நகைகள் மீட்கப்படும் என்று நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு விலையுயர்ந்த தங்க நகைகள், வைரம், வைடூரியம் போன்றவை எல்லாம் திருடு போனதாக கொடுக்கப்பட்ட புகாரில், வீட்டில் 20 வருடத்திற்கு மேல் வேலை செய்த வேலைக்கார பெண் மற்றும் கார் டிரைவர் இருவரும் சாதுரியமாக திட்டம் தீட்டி தொடர்ந்து பல வருடங்களாக திருடியது அம்பலமானது. 

ரகசிய முறையில் ஐஸ்வர்யா வீட்டில் திருடிய நகைகளை கொண்டு சென்னையில் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்ததும் அம்பலமானது குறிப்பிடத்தக்கது. தற்போது பாடகர் விஜய் யேசுதாஸ் மனைவி கொடுத்த புகாரும் அதே பாணியில் திருடப்பட்டிருக்குமோ என சந்தேகம் வலுக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Yesudas wife Complaint in police station chennai


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->