ஷாருக்கானுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதி தமிழில் விக்ரம், விடுதலை, காத்துவாக்குல 2 காதல், மாநகரம் இந்தி ரீமேக்ஸ என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர இவரது நடிப்பில் உருவாகிய கடைசி விவசாயி சமீபத்தில் ரிலீசானது. தற்போது இவரது நடிப்பில் மாமனிதன் படம் ரிலீஸாகி இருக்கின்றது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்க சீனிராமசாமி இயக்கியுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் நடிகை காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். 

இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி ஷாருக்கானின் ஜாவான் படத்தில் வில்லனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது நேரடியாக பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Sethupathy Villain Role for sharukhan jawan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->