பிறந்த நாளில், விஜய் சேதுபதிக்கு நேர்ந்த துயர சம்பவம்.! மிகுந்த வருத்தத்தில் ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி பட்டாகத்தியில் கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி சர்ச்சையை கிளப்பியது. 

இதுபோல ரவுடிகள், தாதாக்கள் பட்டா கத்தியை வைத்து கேக் வெட்டிய பொழுது போலீசார் கைது செய்தனர். ஆனால், ஒரு முன்னணி நடிகர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடும் பொழுது நடவடிக்கை எடுப்பார்களா என்னும் கேள்வி எழுந்த நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். 

இதுகுறித்து அவர், "எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனைமுன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில் பிறந்தநாள் கொடண்டாத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்தநாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.

தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்த படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்த படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது.

இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்நச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay sethupathi pattakathi tweet


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal