வசூலை வாரிக் குவிக்கும் விஜயின் 'வாரிசு' திரைப்படம்.. இதுவரை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிதுள்ள திரைப்படம் 'வாரிசு'. இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்துள்ளார்கள்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 11ம் தேதி உலகம் முழுவதும் விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு வெளியானது.

இந்த படத்தில், விஜய் தனக்குரிய பாணியில் நடித்துள்ளார். அதில், முதல் பாதியில் அமைதியான அம்மா பாசம் கொண்ட விஜய்யையும் இரண்டாம் பாதியில் ஆக்ஷன், காமெடி மற்றும் தந்தை பாசம் கொண்ட விஜய்யையும் பார்க்க முடிகிறது.

அதிலும் குறிப்பாக நடனக் காட்சிகளில் விஜய் அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாக அள்ளித் தெறிக்கவிட்டுள்ளார். சண்டை காட்சிகளில் சும்மா பறந்து பறந்து பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சிதற விட்டுள்ளார்.

இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay in varisu movie collected 150 crores


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->