விக்கி படத்துல இவங்களா? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'போடா போடி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். 

அதன் பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். 

தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை இயக்க இருந்த நிலையில் திடீரென மகிழ்திருமேனி இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. 

மேலும் இந்த படத்தை நடிகர் கமலஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அதாவது, இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருவதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vignesh shivan movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->