விக்னேஷ் சிவனை கோவப்படுத்திய நயன்தாரா பட டைரக்டர்.! - Seithipunal
Seithipunal


புது நடிகர், நடிகையர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் காதம்பரி. இதனை அருள் என்பவர் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்து இருக்கின்றார். காசிமா ரபி என்ற நடிகை புதுமுகமாக அறிமுகமாகிறார். மேலும், நிம்மி, அகிலா நாராயணன், ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர். 

பிரித்வி இசையில் உருவாகும் இந்த படத்தை, உதயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் அருள், "இது ஆந்திர காடுகளில் எடுக்கப்பட்ட ஒரு திகிலான படம். நானும் ரவுடிதான் படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கேரக்டர் காதம்பரி. 

அந்த கேரக்டரும், பெயரும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், படத்திற்கு காதம்பரி என்று பெயர் வைத்தேன். இதனால், விக்னேஷ் சிவனை வைத்து இந்த ட்ரைலரை வெளியிடலாம் என்று நினைத்து அவரிடம் சென்றேன். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். 

அதற்கு காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தில் அமைந்துள்ள கேரக்டரை மையமாக கொண்டு காதம்பரி என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் படம் இயக்க இருப்பதாகவும், அதை நான் வைத்துவிட்டதால் கோபத்தில் ட்ரெய்லரை வெளியிட மறுத்து விட்டதாகவும், அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கூறியதன் மூலம் நான் தெரிந்துகொண்டேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vignesh angry with kadhambari movie


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->