அஜித் படத்தில் அர்ஜுன்:  வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. நடிகர் அஜித் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து பின்னர் சென்னை திரும்பினார். 

மீண்டும் அஜர்பைஜான் நாட்டிற்கு அஜித் சென்றபோது நடிகை திரிஷாவும் சென்றார். இதன் மூலம் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா நடிப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது நடிகர் ஆரவ் தனது சமூக வலைதளத்தில் அஜித் மற்றும் அர்ஜூனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு அஜித்-அர்ஜுன் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vidamuyarchi movie update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->