வெளியானது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு க்ளிக்ஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்த்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 

இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 'விடாமுயற்சி' படம் வெளியாகிறது. 

இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதி வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதையடுத்து இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விடாமுயற்சி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vidamuyarchi movie shooting clicks viral


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->