பாலாவின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் பத்மகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜோசப். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் சூப்பர் ஹிட்டானது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம்  ஜோசப் படத்தின் தமிழில் ரீமேக்கை தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தமிழ் ரீமேக்கிற்கு "விசித்திரன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தில் ஆர்கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். பத்மகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vichithiran movie first look poster


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal