'வாடிவாசல்' படத்தில் இருந்து ஜிவி பிரகாஷை நீக்கிய வெற்றிமாறன்?.. காரணம் இதுதானா.? - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது வரை படப்பிடிப்பு தொடக்கப்படவில்லை.

இதற்கு இயக்குனர் வெற்றிமாறன் தான் காரணம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அவர் விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் திரைப்படத்தின் பணிகளை ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ்‌‌.தானு தயாரிக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் விலகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதற்கு காரணம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷூக்கும், இயக்குனர் வெற்றிமாறனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்  சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியது இயக்குனர் வெற்றிமாறனுக்கு பிடிக்காததால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran reject GV Prakash in vadivasal movie


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->