தெலுங்கு நடிகரிடம் கதை சொன்ன வெற்றிமாறன்! வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறுகிறார் சூர்யா! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகரிடம் கதை சொன்ன வெற்றிமாறன். வாடிவாசல் படத்திலிருந்து வெளியேறுகிறார் சூர்யா.

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்று, சிறந்த வெற்றி இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் வெற்றி மாறன்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு "வாடிவாசல்" என்று பெயரிடப்பட்டு அறிவிப்பு வெளியாகி நீண்ட காலமாகிறது. தொடர்ந்து வெற்றி மாறனும், சூர்யாவும் அடுத்தடுத்த படங்களில் பிசியாகி விட்டதால், வாடிவாசல் குறித்த நேரத்தில் தொடங்காமல் போனது.

கலைப்புலி எஸ். தாணு வாடிவாசல் படத்தை தயாரிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் "விடுதலை - 2" படத்தை முடித்தவுடன் வாடிவாசல் படம் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்தப் படத்தில் அமீர் நடிப்பதால் சூர்யா - அமீர் பிரச்சனை காரணமாக படம் தாமதமாகிறது என்றும் கூறப்பட்டது. பருத்திவீரன் படம் தொடர்பாக தயாரிப்பாளருடன் அமீருக்கு ஏற்பட்ட பிரச்சனையில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோருக்கு அமீர் மீது மனக்கசப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெற்றிமாறன் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவிடம் வாடிவாசல் கதையைக் கூறியுள்ளதாகவும், இதையறிந்த சூர்யா வெற்றிமாறன் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், தொடர்ந்து அவர் வாடிவாசல் படத்திலிருந்து விலகுவதாகவும் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். இது வெற்றிமாறன் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vetrimaran next vadivasal story tell to Telugu actor so surya left vadivasal


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->