தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் வேதாளம்.. ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித், நடிகைகள் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் 2015ம் ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'வேதாளம்' இந்த படம் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக கூறப்பட்டன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போது 'வேதாளம்' படத்தின் தெலுகு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளில் 'சிரஞ்சீவி தற்போது ஈடுபட்டுள்ளார். அந்த பட வேலைகள் முடித்த பின்னர் வேதாளம் ரீமேக்கில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

இயக்குனர் மெஹர் ரமேஷ் இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தான் 'பில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவியின் பிறந்தநாளில்  'வேதாளம்' படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vedhalam film remake in telugu


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->