வாரிசு வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.! - Seithipunal
Seithipunal


இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'வாரிசு'. இது கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு  இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்த நிலையில், தில் ராஜூ தயாரித்து இருந்தார். 

இதில், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், விடிவி கணேஷ், சரத்குமார், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

வாரிசு படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், ஏழு நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 'வாரிசு' படத்தின் வெற்றி கொண்டாட்டம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு கேக் ஊட்டினார். 

இந்தக் கொண்டாட்டத்தில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகர் ஷாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varisu movie team celebrate to cake cut for film success


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->