கருப்பு சட்டையில் கெத்தாக நடந்து வந்து தீபாவளி வாழ்த்து சொன்ன விஜய்! - Seithipunal
Seithipunal


பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குரான வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். 

வாரிசு திரைப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஹைதராபாத் சென்னை என இரண்டு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருகின்ற 27 ஆம் தேதிக்குள் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் வாரிசு பணத்தின் தீபாவளி வாழ்த்துகள் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கருப்பு சட்டையில் விஜய் நடந்து வருவது போல் உள்ள போஸ்டரில் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வாரிசு வெளியிடப்படும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதனை தற்போது விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் தீபாவளி பரிசாக வாரிசு போஸ்டர் அமைந்ததால் உற்சாகமடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varisu Movie new poster release for diwali wish


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->