இன்று 'வாரிசு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் 'என் நெஞ்சில் குடியிருக்கும்'.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் #என்நெஞ்சில்குடியிருக்கும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Varisu audio launch twitter trent en nenjil kudirukum


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->