அந்த வாரிசு நடிகையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய விஷால்.! மீண்டும் துளிர்த்த காதல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவிற்கு போடா போடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லி  குணச்சித்திர பாத்திரங்கள் என பல பரிணாமங்களில் கலக்கி வருபவர் இவர்.

பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படத்தில் இவரது நடிப்பு  மிகவும் பாராட்டப்பட்டது. மேலும் விக்ரம் வேதா திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இவர். சர்க்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்து  தனக்கென தனி பாணியை உருவாக்கியவர்.

தற்போது இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் கொன்றால் பாவம் என்ற திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் இவருடன் நடித்த குக் வித் கோமாளி புகழ்  சந்தோஷ் பிரதாப் என்பவரை வரலட்சுமி காதலித்து வருவதாக கோடம்பாக்கத்தில் இருந்து செய்திகள் வெளி வருகின்றன.

விஷாலும் இவரும் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர். அதன்பிறகு தனது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் வரலட்சுமி. நிலையில் அவருக்கு  கொன்றால் பாவம் திரைப்படத்தில் நடிக்கும் போது சந்தோஷ் பிரதாப்புடன்  காதல் துளிர் விட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. எங்கு சென்றாலும் ஜோடியாகவே சென்று வரும் இந்த ஜோடி  விரைவிலேயே தங்களது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் எனவும்  கிசு கிசுக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

varalakshmi sarath kumar in love with her co star kodambakkam expects this pair will make an official announcement soon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->