பொதுத்துறை நிறுவனங்களை விற்றால் தான் அது முடியும்- வானதி ஸ்ரீநிவாசன்.! - Seithipunal
Seithipunal


சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோத்தகிரியில் பாஜக மகளிரணி சார்பில் 200 மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தியவாறு பேரணி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, "75வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் கொடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பல்வேறு பகுதிகளிலும் தேசியக்கொடியை மக்கள் ஏற்றியுள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

பொதுமக்களும் வீடுகள், கடைகளில் தேசியக்கொடி ஏற்றியுள்ளது திருவிழாவை போலிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை விற்று அதனை நல்ல முறையில் நடத்த முடியும் என்று முயற்சி செய்கிறோம். இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் செய்வதால் மக்களுடைய வரிப்பணம் வீணாகிறது. எனவே தான் மக்களுக்கு நல்ல சேவையை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஒத்துக் கொண்டால்தான் உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி மாற்றங்கள் கொண்டுவர முடியும். ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது மத்திய அரசின் முடிவு மட்டும் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi srinivasan speech Kothagiri


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal