வலிமை படத்தை பார்த்த முக்கிய பிரபலம்.! படம் எப்படியிருக்கு வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு அப்டேட் எதுவும் வெளியாகாத நிலையில் கடந்த சில மாதங்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை படக்குழுவினர் மற்றும் நடிகர் அஜித்குமார் பார்த்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், அதில் வரும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Valimai Movie review from ajith


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->