கழக தலைவனாக உருமாறும் உதயநிதி.?! உடன்பிறப்புகளை உசுப்பேற்றிய தகவல்.!  - Seithipunal
Seithipunal


நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். இவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது தமிழில் 90% படங்களை வாங்கி தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகின்றது. 

படத்திற்கான விளம்பரமும் பயங்கரமாக இருக்கிறது. படத்தின் வசூல் மற்றும் கணக்கு வழக்குகள் அனைத்தும் சரியாக இருப்பதால் மற்ற தயாரிப்பாளர்கள் அனைவருமே படத்தை விநியோகம் செய்ய ரெட் ஜெயன் மூவிஸை நாடி வருகின்றனர். 

அத்துடன் அவர் சினிமாவில் நடிக்கும் கதைகள் அனைத்துமே சரியாக தேர்வு செய்யப்பட்ட கதாபாத்திரங்களாக இருக்கின்றன. தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு கழகத்தலைவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை கேட்டதும் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

udhayanithi stalin in makizhthirumeni movie as kazhakathalaivan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->