பிரபல பாலிவுட் இயக்குநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ராஜ்குமார் சந்தோஷி என்பவர் ஒரு திரைப்படத் திட்டத்திற்காக, ரூ.1 கோடி கடனாகக் கொடுத்துள்ளார். அந்தக் காசோலையை பணமாக்குவதற்காக அசோக் லால் வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், ராஜ்குமார் சந்தோஷி கணக்கில் போதிய இருப்பு இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. 

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அசோக் லால் காசோலைகள் பவுன்ஸ் தொடர்பாக ராஜ்குமார் சந்தோஷியை தொடர்புகொள்ள முயன்றுள்ளார். மேலும், பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்தியஸ்தம் முயற்சிகள் எதற்கும் ராஜ்குமார் சந்தோஷி உடன்படாததால், அசோக் லால் நீதிமன்ற உதவியை நாடினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த ஜாம்நகர் நீதிமன்றம், ராஜ்குமார் சந்தோஷிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ2 கோடி அபராதமும் விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் ’கயல்’, ’கடக்’, ’தாமினி’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலமாகவும் புகழ் பெற்றவர். ராஜ்குமார் சந்தோஷியின் அடுத்து வரவிருக்கும் ’லாகூர் 1947’ திரைப்படத்தை ஆமிர் கான் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் சன்னி தியோல், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two years jail prison to director rajkumar santhosh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->