பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை முயற்சி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகை கட்டா மைதிலி. ரம் வகையை சேர்ந்த மதுபானம் 8 மது பாட்டில்கள் மற்றும் தூக்க மாத்திரையை ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு வீடியோ காலில் தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை முயற்சித்துள்ளார்.

இதையடுத்து, மைதிலியின் தொலைபேசி சிக்னலை வைத்து அவரது வீடு இருக்கும் பகுதியை காவல்துறையை கண்டித்து வீட்டுக்கு சென்றனர். வீட்டில் மைதிலி சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு காவல் துறையின் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 6 மாதங்களுக்கு பஞ்ஜகுட்டா காவல் நிலையத்தில் தனது கணவர் ஸ்ரீதர் ரெட்டி மற்றும் 4 பேருக்கு எதிராக துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை முடிந்தது. இதேபோன்று சூரியபேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மைதிலி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கட்டா மைதிலி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tv actress mythili suicide attempt


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->