"உங்க தளபதி நல்லா இருக்காரு"...ஓயாமல் அப்டேட் கேட்ட ரசிகர்கள்... திரிஷா அளித்த 'நச்' பதில்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் லியோ. இந்தத் திரைப்படத்தில் விஜயுடன் திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஸ்கின் கௌதம் மேனன், சாண்டி மற்றும் மேத்யூஸ் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை வைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில்  நடந்து வருகிறது. இந்த திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இத்திரைப்படத்தைச் சார்ந்த என்ன ஒரு நடிகர்களிடமும் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட்டுகளை கேட்டுக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரிஷாவிடம் விடமும்  ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். இதற்கு பதிலளித்து பேசிய திரிஷா நான் எங்கு சென்றாலும் நீங்கள் இந்த அப்டேட்டை கேட்டுக் கொண்டிருப்பதால் சொல்கிறேன் உங்கள் தளபதி நன்றாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் நன்றாக இருக்கிறார் படப்பிடிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது நான் அங்கிருந்துதான் வருகிறேன் என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் லியோ படத்தின் அப்டேட் பற்றிய விவரங்களை  லியோ பட நிகழ்ச்சியில் நாம் பேசலாம் என தெரிவித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கைத்தட்டி திரிஷாவிற்கு தங்களது மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha said to the fans who were bothered by the constant updates


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->