இது தல தளபதி பொங்கல்.. படம் பார்க்கப் போன திரிஷா வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகியது. அதே போல் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. 

இதுவும் ஜனவரி 11ம்  தேதியான நேற்றே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் 2 திரைப்படங்களும் (ஜனவரி 11ம் தேதி) ஒரே நாளில் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், நடிகை திரிஷா விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்களை பார்த்து ரசித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகிய நிலையில், திரிஷா தனது தோழிகளுடன் சேர்ந்து முதல்நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளார். 

அவர் படம் பார்த்த வீடியோவை வெளியிட்டு தல தளபதி பொங்கல் என பதிவிட்டு இருக்கிறார். திரிஷாவின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha Post thala Thalapathy Pongal special


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->