இந்தியன் 2 திரைப்படத்தில் இணைந்த திரிஷா.?! விரைவில் துவங்கும் படப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் விலகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஷங்கர் இயக்கி கமலஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்ற இந்தியன் 2 திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. சில மாதங்கள் கமலஹாசனின் மேக்கப் திருப்தியாக இல்லை என்று படப்பிடிப்பு நடக்காமல் போனது. ஷூட்டிங்கின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றது.

இது படக்குழுவினர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. லாக்டவுன் முடிந்து அடுத்ததாக கமல் விக்ரம் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 

இயக்குனர் ஷங்கரும் ராம்சரன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் அடுத்த லாக்டவுன் வருவதற்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்று படக்குழு நினைத்திருக்கின்றது. நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். 

இந்தியன் 2 திரைப்படத்தில் அவர் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். எனவே, காஜல் நடித்த காட்சிகள் அதிகம் இடம் பெறவில்லை என்பதால் இந்த திரைப்படத்தில் இருந்து அவர் விலகியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. இத்தகைய நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trisha in indian 2 movie


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal