சிம்பு ஊரில் இல்லாத நேரத்தில் ரசிகர்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தீயாக களத்தில் இறங்கிய டி.ஆர்.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்குவித்து வருகின்றனர். அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே சமீபத்தில் பத்து தல திரைப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சில வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தாய்லாந்தில் இருக்கும் நடிகர் சிம்பு வரும் மார்ச் 18 நடக்கவுள்ள பத்து தல இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வருகை புரிய உள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் டி ராஜேந்திரன் தான் செய்து வருகின்றார்.

எனவே நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள இந்த விழாவை நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு வேப்பேரியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அவர் கோரிக்கை வைத்து, ஆலோசனை நடத்தி இருக்கின்றார். அப்பொழுது சிம்பு ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் டி.ஆருடன் சென்று இருக்கின்றனர். இந்த விழாவை சிறப்பான முறையில் நடத்த சிம்பு ரசிகர்களுடன் சேர்ந்து டி.ஆர் தீயாக வேலை செய்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TR ARRANGE PATHU THALA AUDIO LAUNCH WORKS


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->