நடிகர் போண்டாமணியின் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும். - அமைச்சர் மா.சு.!  - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் நடிகர் போண்டாமணியின் மருத்துவ செலவுகளை தமிழக அரசு ஏற்கும் என்று மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

மருதமலை, சுந்தரா ட்ராவல்ஸ், வின்னர், ஜில்லா மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் போண்டாமணி. கடந்து சில தினங்களாக இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இதய பிரச்சினை குறித்து சிகிச்சை பெற்று வரும் போண்டாமணி மருத்துவ சிகிச்சை செய்ய பொருளாதார வசதி இல்லாமல் தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. தமிழக அரசிடம் இருந்து தனக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இத்தகைய சூழலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போண்டாமணியை தமிழக மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது உடல் நலம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "நடிகர் போண்டாமணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு ஏற்கும் என்றும்,அவரது மருத்துவ செலவுகளை முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்." என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn govt accept Bonda Mani treatment fees


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal