வெளியானது சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படத்தின் புரோமோ வீடியோ.!
thiru manikkam movie promo vedio released
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. நடிகை அனன்யா, இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதற்கிடையே இந்தப் படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானதையடுத்து இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் உரிமையை ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இயக்குனர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
thiru manikkam movie promo vedio released