சரத்குமார்–சண்முக பாண்டியன் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
The release date of the movie Kombu Seevi starring Sarathkumar Shanmuga Pandian has been announced
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன்-காமெடி படம் ‘கொம்பு சீவி’ ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இணைந்து நடித்திருப்பது இந்தப் படத்தின் மிகப் பெரிய சிறப்பம்சம்.
கடந்த அக்டோபர் 11ஆம் தேதி வெளியான டீசர் செம காமெடி, அதே நேரத்தில் பக்கா ஆக்ஷன் என கலவையான அனுபவத்தை தரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. 1 நிமிடம் 33 விநாடிகள் நீளமான டீசரில் இடம்பெற்ற சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியனின் தாக்கமான டயலாக்குகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
சரத்குமார் ரொக்கப் புலி என்ற கதாபாத்திரத்திலும், சண்முக பாண்டியன் பாண்டி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். “சரண்டர் ஆனவர்களை நாங்கள் அடித்ததில்லை… சண்டைக்கு வந்தவர்களை நாங்கள் சரண்டர் ஆக விட்டதில்லை” என்ற சரத்குமார் பேசிய டயலாக் டீசரின் ஆரம்பத்திலேயே ரசிகர்களை கவர்ந்தது.
அதேபோல், பாகிஸ்தான் மீது வீச குண்டுகளை தயாரித்தோம் என கதாபாத்திரங்கள் நீதிமன்றத்தில் கூறும் நகைச்சுவையான காட்சி, “இன்றைக்கு காஷ்மீர் மீத குண்டு போட்டவங்க… நாளைக்கு காமக்கா பட்டில குண்டு போட்டா என்னங்கு செய்யறது?” என்று கேள்வி எழுப்பும் டயலாக்குகள் மேலும் கவனத்தை ஈர்த்தன.
டீசர் வெளியாகியதிலிருந்து படம் எப்போது திரையரங்குகளில் வெளிவரும் என்பதே ரசிகர்களின் முக்கிய கேள்வியாக இருந்தது. பல வதந்திகள் வெளியாகியிருந்தாலும், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக கொம்பு சீவி படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆண்டு இறுதியில் செம காமெடி–ஆக்ஷன் ட்ரீட் கொடுக்கும் படமாக ‘கொம்பு சீவி’ இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
English Summary
The release date of the movie Kombu Seevi starring Sarathkumar Shanmuga Pandian has been announced