வெங்கட் பிரபுவின் கஸ்டடி ஓடிடியில் வெளியீடு! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வெளியாகிய திரைப்படம் கஸ்டடி. இப்படம் ஒடிடியில் வெளியாவதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி பிரியாமணி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்தனர்.

இந்த கூட்டணி இசைப்பிரியர்களிடையே வெகுவான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் மாநாடு. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சிறிது குழப்பியதாக பல தரப்பினரிலிருந்து விமர்சனங்கள் எழுந்தது.

அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு இதன் பிறகு வரும் திரைப்படங்களில் இந்த மாதிரியான முறைகளை கையாள போவதில்லை எனக் கூறினார்.

கடந்த மாதம் வெளியாகிய கஸ்டடி திரைப்படம் ரசிகர்களிடையே இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் வெளியாகிய முதல் நாள் இந்திய அளவில் 4 கோடி ரூபாயை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு வாரத்தில் 10 கோடியை கூட படம் தாண்டவில்லை என நம்பகத்தன்மை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் வரும் ஜூன் 9ஆம் தேதி படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The movie custody has confirmed to be released in OTT


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->