"மந்த்ரா தான் வேண்டும்" அடம் பிடித்த தமிழ் சினிமாவின் 4 முன்னணி ஹீரோக்கள்.! லிஸ்ட்ல இந்த நடிகர் கூடவா இருக்காரு.? - Seithipunal
Seithipunal


90களில்  தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் மந்த்ரா. ஆந்திராவைச் சார்ந்த இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான பிரியம் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார். விஜய், கார்த்திக் உள்ளிட்ட  முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர்  90களில் கனவு கன்னியாக வலம் வந்தவர்.

இவரிடம் மயங்கிய பல நடிகர்களும் இவர் தான் தங்களது படங்களில் நடிக்க வேண்டும் என இயக்குனர்களிடம் அன்பு கட்டளை வைத்த சம்பவங்களும் உண்டு.  அப்படிப்பட்ட 4 ஹீரோக்களை பற்றி இப்போது பார்ப்போம்.

விஜய் : 

90களில் இளம் கதாநாயகனாக விளங்கிய விஜய் மந்த்ராவின் மீது கொண்ட க்ரஷினால் தனது லவ் டுடே படத்தில் இவர் எப்படியாவது நடித்த ஆக வேண்டும் என்று இயக்குனருக்கு கட்டளை வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் சுபலட்சுமி கதாநாயகியாக நடித்த போதும் விஜயின் கட்டளையை மறுக்க முடியாத இயக்குனர் மந்திராவை விஜய்க்கு தோழியாக அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அருண் விஜய்:

என்.பாண்டியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த பிரியம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மந்த்ரா. இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அருண் விஜய் நடித்திருப்பார். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் அந்த படத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். அதேபோலவே நிஜத்தில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அருண் விஜயின் தந்தையும்  பிரபல நடிகருமான விஜயகுமாரின் எதிர்ப்பால் அந்தக் காதலை கைவிட்டு இருக்கிறார் அருண் விஜய் ஒன்று கூறப்படுகிறது.

கார்த்திக்:

தமிழ் சினிமாவில் நவரச நாயகனான கார்த்திக்  நடிப்பில் சுந்தர் சி இயக்கிய திரைப்படம் கண்ணன் வருவான். இந்தத்  திரைப்படத்தில் திவ்யா உன்னி கதாநாயகியாக நடித்திருந்தார். மந்த்ராவை நடிக்க வைக்குமாறு கார்த்திக் கேட்டுக் கொண்டதால் இயக்குனர் அவருக்கு முன்னணி கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நடித்த குபேரன் படத்திலும் மந்திரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு : 

இளைய திலகம் பிரபு மந்த்ராவின் அழகில் மயங்கி அவரை தனது படத்திற்கு ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் 1997 ஆம் ஆண்டு வெளியான தேடினேன் வந்தது என்ற திரைப்படத்தில் இயக்குனர் ரவிவர்மன் மந்த்ராவை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஒரு நகைச்சுவை திரைப்படமாக இருந்தாலும் மந்திரா மற்றும் பிரபு இடையேயான காதல் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டு இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The four leading heroes of Tamil cinema who wanted Manthra


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal