ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட 7 இந்திய படங்களில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் - அதுவும் தமிழர் .. அவர் யாரென்று தெரியுமா..?!
The First Indian Actor Who Acted in 7 Films Which is Sent For Oscar Nomination
இயக்குனர், நடனக் கலைஞர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் என்று பன்முகத் திறமையாளராக இருக்கும் ஒருவர், தமிழ் மொழியில் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி உட்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் சிறந்த படங்களைக் கொடுத்துள்ளவர்.
மேலும் தனது நடிப்புத் திறமைக்காக தேசிய விருது, பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு தேசிய விருதுகளை வென்றுள்ள இவர், சர்வதேச அளவிலும் பல்வேறு உயரிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளளார்.
அந்த வகையில் உலகத் திரைப்படத் துறையில் மிக உயரிய அங்கீகாரமாக பல நாட்டு திரைத்துறை ஜாம்பவான்களாலும் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில் இவர் நடித்த 7 திரைப்படங்கள் பரிந்துரைக்கப் பட்டன. அந்த மாபெரும் திறமைசாலி ஒரு தமிழ் நடிகர் . அவர் தான் உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலஹாசன்.
இவர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான நாயகன், பரதன் இயக்கத்தில் வெளியான தேவர்மகன், பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான குருதிப்புனல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், கமலஹாசன் அவரே இயக்கிய ஹேராம் உள்ளிட்ட தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட படங்கள் அனைத்தும் இவரின் நடிப்பிற்காக பரிந்துரைக்கப் படவில்லை என்றாலும், சிறந்த திரைப்படங்களுக்கான வெளிநாட்டு மொழிப் பிரிவில் பரிந்துரைக்கப் பட்டன. இதன் மூலம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 7 இந்திய படங்களில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை கமலஹாசன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
The First Indian Actor Who Acted in 7 Films Which is Sent For Oscar Nomination