46 சர்வதேச விருதுகளை வென்ற இந்திய கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு படம் தற்போது ஓடிடியில்; மிஸ் பண்ணிடாதீங்க..!
The biopic of the Indian Kabaddi player who won 46 international awards is now on OTT
இந்தியாவைப் பிரதிநிதத்துவப்படுத்திய தெலுங்கானாவின் நல்கொண்டாவைச் சேர்ந்த கபடி வீரரான நாகுலய்யாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு விக்ராந்த் ருத்ரா இயக்கத்தில், ஸ்ரீனி குப்பாலா தயாரித்த படம் அர்ஜுன் சக்ரவர்த்தி. கடந்த ஆகஸ்ட் மாதம், திரையரங்கில் வெளியான இப்படம் மிதமான வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் கதாநாயகனாக விஜய ராம ராஜுவும், சிஜா ரோஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அஜய், அஜய் கோஷ், தயானந்த் ரெட்டி மற்றும் துர்கேஷ் லங்காலபள்ளி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே 46 சர்வதேச விருதுகளை வென்றுள்ள இந்த படம், இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. தமிழில் பைசன் என்ற திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இவ்வாறு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக்கொண்ட அர்ஜுன் சக்ரவர்த்தி அர்ஜுன் சக்ரவர்த்தி ஓடிடியில் வெளியாகியுள்ளது.
English Summary
The biopic of the Indian Kabaddi player who won 46 international awards is now on OTT