ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்! திருமண சிக்னல் கொடுத்தாரா ஜான்வி கபூர்?
Janhvi Kapoor Instagram post has fans confused Did Janhvi Kapoor give a marriage signal
பாலிவுட் அழகி ஜான்வி கபூரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு, ரசிகர்களை ஆச்சர்யத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது.
“Save the date – October 29” என்று அவர் பதிவு செய்திருக்கிறார். அதோடு ஹார்ட், டான்சிங் கேர்ள், பிளைட் போன்ற எமோஜிகளும் சேர்த்து இருந்ததால், இதோ திருமண அறிவிப்பா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி – 80களில் தமிழில் ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர். தமிழைத் தாண்டி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் தன் அழகும் நடிப்பும் மூலம் வெற்றி கண்டார். பின்னர் பாலிவுட்டில் செட்டில் ஆனார்.அங்கு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, “லேடி சூப்பர் ஸ்டார்” என்று ரசிகர்கள் அழைத்தனர்.
பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி, தனது இரு மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூரை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இன்று இருவருமே திரையுலகில் தங்கள் தடத்தை பதித்து வருகிறார்கள்.
ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து தன்னுடைய தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இப்போது தெலுங்கிலும் நுழைந்து, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘தேவாரா’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அதோடு, ராம் சரண் நடிக்கும் புதிய படத்திலும் ஜான்வி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தாயின் பூர்வீகமான தமிழ்நாட்டை மறக்காமல், தமிழ் கலாச்சாரத்தையும் பின்பற்றி வருவதாக பலமுறை நிரூபித்துள்ளார் ஜான்வி.
இந்நிலையில், அவர் காதலித்து வருவது குறித்து கடந்த சில வருடங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அவர் காதலன் ஷிகர் பஹாரியா, முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் சுஷீல் குமார் ஷிண்டே அவர்களின் பேரன். இருவரும் பல முறை பொதுவெளியில் ஒன்றாகக் காணப்பட்டுள்ளனர்.
இப்போது, ஜான்வியின் “Save the date – October 29” என்ற இன்ஸ்டாகிராம் பதிவு, ரசிகர்களிடையே திருமண நிச்சயத்தின் சிக்னலாகப் பார்க்கப்படுகிறது.ரசிகர்கள் “உங்களுக்கு திருமண அறிவிப்பு வரப்போகிறதா?” என்று கேள்வி எழுப்பி, வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் அந்த தேதியில் ஜான்வி கபூர் என்ன அறிவிக்கப் போகிறார்? அது திருமண அறிவிப்பா? அல்லது புதிய பட அறிவிப்பா?
இதற்கான பதிலை அறிய ரசிகர்கள் அக்டோபர் 29 வரை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஒரு காலத்தில் தாயின் புகழை தாண்டி தன்னுடைய பாதையை உருவாக்கிய ஜான்வி – இப்போது திருமண செய்தியால் மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார்.
English Summary
Janhvi Kapoor Instagram post has fans confused Did Janhvi Kapoor give a marriage signal