“அந்த அயோக்கியப் பொண்ணுதான் காரணம்!” – சூர்யா–ஜோதிகா காதல்! ராதிகாவை சிவகுமார் இப்படி சொல்லிட்டாரே? - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் முன்னணியில் இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து வருவதால் பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள். ஆனால் இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் சூர்யாவின் தந்தை சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது பரவலாக அறியப்பட்ட விஷயம்.

சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது திரைப்பயணத்தின் தொடக்கத்திலேயே காதலிக்கத் தொடங்கினர். குடும்பத்தினரின் ஆரம்ப எதிர்ப்பை மீறி, “திருமணம் செய்தால் ஜோதிகாவையே செய்வேன்; இல்லையென்றால் திருமணம் செய்யவே மாட்டேன்” என சூர்யா உறுதியுடன் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சிவகுமார் சம்மதம் தெரிவித்ததுடன், 2006ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு, இந்த தம்பதி திரையுலகில் மட்டுமின்றி குடும்ப வாழ்க்கையிலும் சிறந்த ஜோடியாகப் பார்க்கப்படுகிறார்கள். அஜித்–ஷாலினிக்கு அடுத்தபடியாக ரசிகர்கள் விரும்பும் ஜோடி என்ற பெயரையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவிலிருந்து ஓரளவு விலகி, குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தினார். பின்னர் மீண்டும் திரையுலகுக்கு திரும்பி, பெண்கள் மையப்படுத்திய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். சமீபகாலமாக ஹிந்தி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சூர்யாவும் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகை ராதிகாவும், சிவகுமாரும் கலந்துகொண்டனர். அப்போது ராதிகா, ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் நினைவுகளை பகிர்ந்தார். “சூர்யா ரொம்ப அமைதியாக இருப்பார். நான் அவரிடம் சிரிக்கவும், பேசவும் சொல்வேன். ஜோதிகா ஒரு மூலையில் அமர்ந்திருப்பார். நான் சூர்யாவிடம், ‘போய் ஜோதிகாவிடம் பேசு’ என்று சொல்லுவேன்” என சிரித்தபடி கூறினார்.

இதைக் கேட்ட சிவகுமார் நகைச்சுவையாக, “பார்த்தீங்களா, ஜோதிகாவையும் சூர்யாவையும் சேர்த்தது இந்த அயோக்கியப் பொண்ணுதான். இப்போ இரண்டு பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள்!” என்று கலகலப்பாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து ராதிகா, “நானும் சிவகுமாரும் சேர்ந்து சீரியல் செய்தபோது, ‘அண்ணா, விடுங்க… லவ் பண்றாங்க, கல்யாணம் பண்ணிக்கட்டுமே’ என்று சொல்லுவேன். இவர் ஒத்துக்கொள்ள மாட்டார். இடைவேளைகளில் சூர்யா எனக்கு போன் செய்து, ‘அப்பா என்ன சொல்றாரு அக்கா?’ என்று கேட்பார்” என பகிர்ந்தார்.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சூர்யா–ஜோதிகா காதல் கதையை பேசுபொருளாக மாற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

That naughty girl is the reason Surya Jyothika love Did Sivakumar say this about Radhika


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->