தங்கர் பச்சானின் அடுத்த படத்திற்கு வித்தியாசமான பெயர்! பர்ஸ்ட் லுக் வெளியிட்ட சிவகார்த்திகேயன்!  - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்ற படத்தின்  பெயரையும், முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளார். படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என பார்த்தால், இந்த படத்தின் இயக்குனர் தங்கர் பச்சான் என்பது தான் மற்றுமொரு ஆச்சரியம். தனக்கு என ஒரு எல்லையை வகுத்து பயணித்த தங்கர் பச்சான் இந்த படத்தில் மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதையே படத்தின் பெயர் உணர்த்துகிறது. 

இந்த படத்தில் கதையின் நாயகனாக படத்தினை இயக்கம் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் அறிமுகமாகிறார். தமிழ் திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் அறியப்பட்ட தங்கர் பச்சான், தன் மகன் விஜித் பச்சன் நாயகனாக நடிக்கும் படத்தின் மூலம் இரண்டு வருடங்களுக்கு பிறகு படத்தினை இயக்கியுள்ளார். 

இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் ஆகிய மூவரும் வில்லனாக நடித்துள்ளனர்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த தங்கர் பச்சான், தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு படத்துக்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்தது. இன்று (அக்டோபர் 10) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thankar Bachan's takku mukku tikku thalam


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->