ப்பா.. அசுர வளர்ச்சி, தாமரைச்செல்விக்கு திரையில் நடிக்கும் வாய்ப்பு.! இவருக்கா ஜோடியாகிறார்.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொண்டு பிரபலமான தாமரைச்செல்வி திரைப்பட நடிகையாக மாறி இருக்கின்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பின் நாட்களில் திரைப்பட வாய்ப்பு கிடைத்து நல்ல நிலைக்கு செல்வதை கண்முன்னே பார்த்து வருகின்றோம். 

ஆனால், ஒரு சிலரோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தங்களது மார்க்கெட்டை இழந்து விடுவதை கூட நாம் கண்டிருப்போம். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழடைந்தவர் தான் நாட்டுப்புற கலைஞர் தாமரைச்செல்வி. 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி ஆகியோருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

ஒரு தெருக்கூத்து கலைஞராக இருந்த அவருக்கு பிக் பாஸ் மூலமாக சினிமாவில் நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்துள்ளதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. இதை கண்ட தாமரை செல்வியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thamari selvi movie with singam puli and robo shankar


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->