'தளபதி 68' யில் விஜய்யின் தங்கையாக இவங்களா? உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 68' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகி பாபு, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

சித்தார்த் முனி ஒழிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

அதாவது, 'தளபதி 68' திரைப்படத்தில் லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடிகர் விஜயின் தங்கையாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

'தளபதி 68' திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் வெளியான நிலையில் இவானா இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக பரவி வரும் செய்தி ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 68 movie update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->