எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தலைவி படக்குழு சர்ப்ரைஸ்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஒரு காலத்தில் இருந்தவர் அரவிந்த்சாமி. பின்பு சில வருடங்களுக்குள் இவர் காணாமல் போய் விட்டார். தனிஒருவன் படத்தின் மூலமாக மாஸ் ரீஎண்ட்ரி கொடுத்ததை, தொடர்ந்து மீண்டும் பல ஹிட் படங்களில் நடித்து இருக்கின்றார். 

இந்த நிலையில் தற்போது அரவிந்த்சாமி ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வருகின்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் பயோ பிக் தலைவியில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அத்துடன் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் நடிக்கின்றார்.

கொரோனா பரவல் காரணமாக சில காலங்கள் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில்  நடிகர் அரவிந்த்சாமி தான் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் இருக்கின்ற புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தர்.

எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தலைவி படக்குழு அரவிந்தசாமி மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரின் ரொமான்டிக் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalaivi team surprise


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->