என்னது.. தளபதியின் 'GOAT' படத்தில் இவரும் இருக்கிறாரா.?! ரசிகர்களுக்கு 'குஷியான' அப்டேட்..!! - Seithipunal
Seithipunal



'தளபதி' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'The Greatest Of  All Time' (GOAT) என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 68 ஆவது திரைப்படமாகும். இந்தப் படம் தளபதியின் ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய அளவிலேயே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதற்கு காரணம் சமீபத்தில் விஜய், 69 ஆவது படத்தில் நடித்து விட்டு, திரைத் துறையை விட்டு விலகப் போவதாகவும், முழு நேர அரசியலில் இறங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். சமீபத்தில் இவர் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் GOAT படத்தில் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் அந்த மூன்றாவது சிங்கிள் பாடலை பிரபல வாரிசு நடிகை ஒருவர் பாடியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் தெரிவித்த போது, "GOAT படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த மூன்றாவது சிங்கிள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து படக்குழுவைச் சேர்ந்த யாரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Actress Added in Thalapathi vijay GOAT Movie


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->