சாதியை தூக்கிப் பிடியுங்கள் தப்பில்லை.. அடுத்த சாதியை தவறாக பேசாதீர்கள் - SV சேகர்.! - Seithipunal
Seithipunal


அறிமுக இயக்குனர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் குமார், ஆஷா சாந்தினி நடிப்பில் வித்தியாசமான கதையம்சம் திரைப்படமாக உருவாகியுள்ள 'முகை' திரைப்படம் விரைவில் திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 இதில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.வி சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி சேகர் ஒரு படம் வெற்றி படமாக இருக்கலாம் அல்லது தோல்வி படமாக இருந்தாலும் அது நல்ல படமாக இருக்க வேண்டும். பத்து ரூபாய் போட்டு பத்து கால் ரூபாய் வந்தாலும் அது வெற்றி படம்தான் ஆனால் அதை நேர்மையாக இருக்க வேண்டும்.

 நான் என்ன செலவழிக்கிறோம் என்று நமக்கு தெரிய வேண்டும் ஏனென்றால் பணம் கொடுக்கும் ஒரே சாதி தயாரிப்பாளர் சாதி மட்டும் தான் மற்ற அனைவரும் பணம் வாங்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் கூடுதல் பொறுப்போடு இருக்க வேண்டும். நேர்மையாக சம்பாதித்தால் அந்த பணம் நம்மிடம் இருக்கும்.

 சினிமாவில் ஒழுக்கத்தை தாண்டி நிறைய விஷயங்களை காட்டிக்கொண்டே இருக்கிறோம். முன்பெல்லாம் கடவுளை பற்றி ஆரம்பக் கட்சி இருக்கும். இப்போதெல்லாம் டாஸ்மாக் காட்சிதான் ஆரம்பக் கட்சியாக உள்ளது. வெறும் பணத்துக்காக சினிமா எடுத்து சமூகத்தை கெடுப்பேன் என்றால் மிக மோசமான பாதிப்பு அவர்களுக்கு தான்.

 அதேபோல் சினிமாவில் ஜாதிரியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ளலாம் எல்லா சாதிக்காரர்களும் படம் பார்க்க வேண்டும். எல்லா சாதிகளுக்கும் பிடித்த மாதிரி படத்தை எடுங்கள். சாதியை தூக்கிப்பிடித்தால் தப்பில்லை. அடுத்த சாதியை தவறாக பேசாதீர்கள். இந்தியா போன்ற ஒரு சிறந்த நாடு எங்கேயும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SV Sekar speech about caste in mukai audio launch


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->