பிரமாண்டமாக நடைபெறும் ‘பத்து தல' படத்தின்' இசை வெளியீட்டு விழா..‌ முக்கிய நடிகர்கள் பங்கேற்பு.! - Seithipunal
Seithipunal


சிம்பு நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை ஊக்குவித்து வருகின்றனர்.

அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை என்.கிருஷ்ணா இயக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் இருவரும் வெவ்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அவ்வாறு, இருக்கையில் இவர்கள் இருவரும் அந்த கெட்டப்களை மறைத்துக்கொண்டு இசை வெளியீட்டு விழாவில் எப்படி கலந்து கொள்வார்கள் என கேள்வி எழுந்தாலும் நடிகர் சூர்யா ஞானவேல் ராஜாவின் உறவினர் என்பதால் கண்டிப்பாக கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya and Vikram participate in pathu thala movie audio launch


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal