ஹாலிவுட் தரத்தில் மேக்கிங்.. சூர்யாவின் கங்குவா படத்தின் மிரட்டான க்ளைம்ஸ் வீடியோ ரிலீஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படம் டிசம்பர் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்  நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு கங்குவா படத்தின் க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது‌. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வரலாற்று பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகள் ஹாலிவுட் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriya in kanguva movie glimpse video release


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->