'சூர்யா 43' படப்பிடிப்பு? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 43 படம் உருவாகிறது. 

இதற்கு முன்னதாக சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா சூரரை போற்றி என்ற திரைப்படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றதால் இந்தக் கூட்டணிக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்திற்கு புறநானூறு என்கின்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர், இருப்பினும் இந்த திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. 

இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இது அவர் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suriya 43 update released


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->