திருமணத்தால், லக்கு மேலே லக்கு.. படுகுஷியான 'கட்டிப்பிடி' புகழ் நடிகர்.! - Seithipunal
Seithipunal


சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் சினேகன். இதுவரை 700-க்கும் அதிகமான படங்களில் 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழகத்தில் டைனமிக் என்ற புரட்சி திருமணத்தை நடத்தி பிரபலமானவர். கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினேகன் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

மேலும், தீவிர அரசியலில் இறங்கிய சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

சினேகன் - நடிகை கன்னிகா ரவிக்கும் வரும் 29ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. நடிகை கன்னிகா ரவி தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சினேகன் இதுகுறித்து, "திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ"என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

snekan happy with his marriage


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->